sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

/

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

7


ADDED : மார் 04, 2026 09:40 PM

Google News

7

ADDED : மார் 04, 2026 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் ஆக தம்பிதுரை மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஞ்சிய இரண்டு இடங்கள் தேமுதிகவுக்கும், காங்கிரசுக்கும் திமுக வழங்கிவிட்டது.

இந்நிலையில், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் தம்பிதுரை மீண்டும் களமிறங்குவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2020 ல் ராஜ்யசபாவுக்கு தேர்வான அவர், 1984, 1989, 1998, 2009, 2014 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனார். மத்திய இணை அமைச்சராகவும், லோக்சபா துணை சபாநாயகர் ஆகவும் பதவி வகித்துள்ளார்.

அதிமுகவுக்கு கிடைக்கும் 2வதுஇடத்தை பாமகவுக்கு வழங்குவதாக இபிஎஸ் கூறியுள்ளார். அக்கட்சி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us