தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விண்வெளியில் அற்புத அனுபவம்; சுக்லா வெளியிட்ட வீடியோ!

விண்வெளியில் அற்புத அனுபவம்; சுக்லா வெளியிட்ட வீடியோ!

விண்வெளியில் அற்புத அனுபவம்; சுக்லா வெளியிட்ட வீடியோ!

1


ADDED : நவ 09, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 09, 2026 07:35 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்துவிட்டு பூமிக்குத் திரும்பியவர்.

இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் இன்று (நவம்பர் 09) விண்வெளியில் முகத்தைக் கழுவும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு: விண்வெளியில் முகத்தைக் கழுவுவது மிகவும் அருமையான அனுபவம். தண்ணீர் என் முகத்தில் ஒட்டிக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு கனவு போன்ற காட்சியை உருவாக்குவதைப் பாருங்கள். இதற்குப் பின்னால் சில சுவாரஸ்யமான இயற்பியல் விதிகள் உள்ளன.

அதற்கான விடை விசைகளில் அடங்கியுள்ளது. விண்வெளியில் இயற்பியல் விதிகள் மாறுவதில்லை, ஆனால் வெவ்வேறு விசைகளின் சார்பு முக்கியத்துவம் மாறுகிறது.

தண்ணீரை வழிந்தோடச் செய்ய நமக்கு வழக்கமான கீழ்நோக்கிய இழுவிசை இல்லாததால், அது ஒன்றாகவே இருந்து நீர்த்துளிகளை உருவாக்குகிறது. இது ஒரு அருமையான காட்சியாக இருந்தாலும், இந்த இயற்பியல் விதிகள் குறித்து புரிந்துகொள்வது அவசியமாகும். இவ்வாறு சுக்லா கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே ஒரு கிளிக்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us