அனில் அம்பானி நிறுவனத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்
அனில் அம்பானி நிறுவனத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்
ADDED : டிச 05, 2025 06:02 PM

மும்பை: அனில் அம்பானி நிறுவனத்துக்கு சொந்தமான 1,120 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றில் நடந்த மோசடி தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின்7 சொத்துகள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் 2 சொத்துகள், ரிலையன்ஸ் வேல்யூ ச்ரவீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிக்சட் டெபாசிட்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும். இதன் மூலம் வழக்கில் இதுவரை முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.10ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய கடனில் ரூ.13 ஆயிரம் கோடியை, வேறு நிறுவனங்களுக்கு திருப்பி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அனில் அம்பானியின் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அனில் அம்பானி உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

