தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சதுரங்கத்தில் சதம் அடித்த இந்தியா: 100வது கிராண்ட் மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!

சதுரங்கத்தில் சதம் அடித்த இந்தியா: 100வது கிராண்ட் மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!

சதுரங்கத்தில் சதம் அடித்த இந்தியா: 100வது கிராண்ட் மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!

1


ADDED : நவ 09, 2026 08:17 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 09, 2026 08:17 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ​மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் அனுஜ் ஸ்ரீவத்ரி, இந்தியாவின் 100வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இது, இந்திய செஸ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று சாதனை.

சாதனை:


7வது ஆசியான் பிளஸ் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அபாரமாக விளையாடிய அனுஜ் ஸ்ரீவத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், சர்வதேச கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் உறுதி செய்து, இந்தியாவிற்கு 100வது கிராண்ட்மாஸ்டர் என்ற வரலாற்று மைல்கல்லைப் பெற்றுத் தந்துள்ளார்.

​38 ஆண்டுகால பயணம்


​1988ல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் உலகின் உச்சத்தை எட்டி புதிய பாதை அமைத்துக் கொடுத்தார். ஆனந்த் கிராண்ட்மாஸ்டராகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கிராண்ட்மாஸ்டர் எண்ணிக்கையில் இந்தியா 'சதம்' அடித்து உலகை வியக்க வைத்துள்ளது.

​மின்னல் வேக வளர்ச்சி:


15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் வெறும் 30 கிராண்ட்மாஸ்டர்களே இருந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினரின் அசுர வளர்ச்சியால், இந்த எண்ணிக்கை மிக வேகமாகக் கூடி 100ஐ தொட்டுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்:


இதுகுறித்து 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: இது உண்மையிலேயே பிரமிக்கத்தக்க வரலாற்று மைல்கல். கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள வேகம் மிகப்பெரிய விஷயம். 2022 சென்னை செஸ் ஒலிம்பியாட்டின் போது, நம் நாடு 75வது ஆண்டைக் கொண்டாடியதால், 75 கிராண்ட்மாஸ்டர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், நான்கே ஆண்டுகளில் நாம் 100ஐ எட்டியுள்ளோம். இதை நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த திருப்தியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us