ADDED : அக் 01, 2025 07:26 AM

திருப்பூர்: ''கரூரில் நடந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,'' என்று, திருப்பூரில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
நேற்று, அவர் அளித்த பேட்டி: வங்கதேச இஸ்லாமியர், ஒரு கோடி பேர் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கு, காங்., - தி.மு.க., - மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆதரவளித்து ஓட்டுரிமை கோரி போராடி வருகின்றனர். இதை முறியடிக்க மத்திய அரச நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பூரில் ஏராளமான வங்கதேசத்தினர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து, நாடு கடத்த வேண்டும்.
மத்திய அரசு வரி சீரமைப்பால் பொருட்கள் விலை குறைந்தது. ஆனால், திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரம் சீர் கெட்டுள்ளது என தவறான தகவல்களை, வெறுப்பு பிரசாரத்தை பரப்புகின்றனர்.
எதிர்கட்சிகள் கூட்டத்தை சீர்குலைப்பது அரசின் நோக்கம். தி.மு.க. ஆட்சியை கவர்னர் 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். சாராய மரணத்தின் போது முதல்வர் நேரில் செல்லவில்லை. கரூர் உயிரிழப்புகளுக்கு, த.வெ.க. காரணம் என்றால், அக்கட்சியை தடை செய்யுங்கள். விஜயை கைது செய்யுங்கள்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்கு பரப்புரை செய்ய வேண்டும். உங்களை முதலில் பாருங்கள் விஜய். உங்கள் தொண்டரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கட்சியை கலைத்து விடுங்கள். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.