/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுகுடி ---- மதுரை பஸ் நிறுத்தம்
/
சிறுகுடி ---- மதுரை பஸ் நிறுத்தம்
ADDED : அக் 01, 2025 07:24 AM
நத்தம் : மதுரையில் இருந்து நத்தம் சிறுகுடிக்கு சென்ற அரசு பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் அவதி அடைகின்றனர்.
மதுரையில் இருந்து நத்தம்,சிறுகுடி, சொக்கம்பட்டி, கொட்டாம்பட்டி வழியாக சிங்கம்புணரிக்கு தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் இந்த பஸ்சில் மதுரைக்கு வியாபாரிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் சென்று வந்தனர்.
இந்த அரசு பஸ் சில மாதங்களாக தினமும் ஒரு வேளை இயக்கபட்டு வந்த நிலையில் சில நாட்களாக எந்த வித முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளிகள் அவதியடைந்துள்ளனர். நிறுத்தப்பட்ட மதுரை -- சிறுகுடி அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தபட்ட போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.