ADDED : அக் 01, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக இரட்டை அரத்தத்தில் பேசிய அதிகாரியை கண்டித்தும், அவருக்கு துணைபோகும் கோட்ட கண்காணிப்பாளரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் திண்டுக்கல்லில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள், அனைத்திந்திய கிராமிய அங்சல் ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க கோட்டத்தலைவர் அழகர்சாமி தலைமைவகித்தார். மாநில செயலாளர் கண்ணன், முன்னாள் கோட்ட செயலர் கணேசன், மாதர் சங்க மாநில பொருளாளர் ராணி பேசினர். நிர்வாகிகள் சென்றாயப்பெருமாள், மைக்கேல் சகாயராஜ், பழனிவேல் கலந்துகொண்டனர்.