சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து வங்கித்துறையை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் மோடி
சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து வங்கித்துறையை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் மோடி
ADDED : அக் 25, 2026 07:53 PM

- நமது நிருபர்-
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 169 கோடி ரூபாயில் ரிசர்வ் வங்கி அமைத்துள்ள தரவு மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்பிஐயின் இந்த மையம் ஆகியன ஒடிசாவுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரிய பலன் அளிக்கும்.
சுதந்திரத்திற்கு பின், பெரிய நகரங்கள் வளர்ந்தன. பிரம்மாண்ட நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் உருவாகின. ஆனால், நாட்டின் பெரும்பகுதி இன்னும் அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கும் நிலை இருந்தது. சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தரமான மருத்துவ சிகிச்சை பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. சிறியநகரங்கள் விமான இணைப்புக்கு போதிய முக்கியத்துவம் அிளக்வவில்லை. பல கிராமங்களில் சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. ரயில் நிலையங்களிலும் நவீன வசதி இல்லாமல் இருந்தன. வளர்ச்சியின் பலன் அனைத்து பகுதிக்கும், அனைத்து மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது பெரும் சவாலாக இருந்தது. மக்கள் நலனுக்காக, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படும் நிர்வாக அணுகுமுறை வாயிலாக மற்ற முயன்றோம்.
எங்களை பொறுத்தவரை வளர்ச்சி என்பது இந்தியாவின் சமச்சீரான வளர்ச்சியையும், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கான வாய்ப்புகளையும் குறிக்கிறது.
பல ஆண்டுகளாக சுாதாரண குடும்பங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குஉரிமைகள் மறுக்கப்பட்டன. இதற்கு வங்கித்துறையும் ஒரு முக்கிய உதாரணம் ஆகும்.
ஏழைகளின் பெயரில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால், 2014 வரை நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு வங்கி சேவைகள் கிடைக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு வங்கிக்கடன் எட்டாக்கனியாக இருந்தது.
ஏழைகள், சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற பெண்கள் இத்தகயைவசதிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இன்று இந்தியாவின் டிஜிட்டல் வங்கி சேவைகள் அனைவரையும் இணைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் அக்கட்சியின் முக்கிய நபர்களுக்குள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொலைபேசி வாயிலாகவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்பட்டன.
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வங்கிக்கணக்கு துவங்க ஜமீன்தாரரின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஆனால், பணக்காரர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் கோடிக்கணக்கில் கடன் கிடைத்தது. இனால் வங்கியில் வராக்கடன் சுமைக்கு ஆளாகி வீழ்ச்சியின் விளிம்புக்கு தள்ளப்பட்டது.
போர் என்பது வழக்கமான முறையில் மட்டுமல்லாமல், பொருளாதாரத்தை தாக்குவதன் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. சைபர் பயங்கரவாதிகளிடம் இருந்து வங்கித்துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
