பீஹார் தேர்தல்: 48 வேட்பாளர்கள் முதல் பட்டியலை வெளியிட்டது காங்.,
பீஹார் தேர்தல்: 48 வேட்பாளர்கள் முதல் பட்டியலை வெளியிட்டது காங்.,
ADDED : அக் 17, 2025 12:21 AM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் உள்ள காங்., 48 வேட்பாளர் கொண்ட முதல் பட்டியலை நேற்று (அக்.17) வெளியிட்டது.
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவ. 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ .,14ல் ஓட்டு எண்ணிக்கைநடக்கிறது
பா.ஜ., தலைமையிலான தேஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை முறையே 101 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலும் வெளியானது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., இடம் பெற்றுள்ள இண்டி கூட்டணியில் 48 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய சட்டசபை காங்., கட்சிதலைவர் ஷகீல் அகமதுகான் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலகாங்.,தலைவர் குடும்பா தொகுதியில் பேட்டியிடுகிறார்.