தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராகுலுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' நோய்: பாஜ குற்றச்சாட்டு

ராகுலுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' நோய்: பாஜ குற்றச்சாட்டு

ராகுலுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' நோய்: பாஜ குற்றச்சாட்டு


ADDED : நவ 19, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். சிகாகோ பல்கலையில் பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தில் பிரச்னை உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாக கூறினார். தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்தார்.

இது தொடர்பாக பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் கூறியதாவது: இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் நேர்மையைக் களங்கப்படுத்தும் வகையில் வெளிநாட்டில் ராகுல் பொய் சொல்கிறார். இது இந்திய ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்பு நிறுவனங்களின் மீதும் அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அவமதிப்பையே காட்டுகின்றன.

ஆனால், தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், இதுவரை எந்தவொரு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யும் துணிச்சல் ராகுலுக்கு வரவில்லை. 2014 தேர்தல் குறித்த அவரது கருத்துகளை, உளறல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு.

ஏதோ ஒரு விசித்திரமான 'செலக்டிவ் அம்னீஷியா' நோயால் ராகுல் பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சில மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்போது, ​​ஒருபோதும் தேர்தல் நடைமுறையின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் ராகுல் படுதோல்வியைச் சந்திக்கிறார். மக்கள் அவரை நிராகரிப்பதற்குக் காரணம் தேர்தல் களத்தில் முறைகேடுகள் நடப்பது அல்ல; மாறாக, ராகுல் தலைமை தாங்கத் தகுதியற்றவர், திறமையற்றவர் மற்றும் இயலாதவர் என்பதுதான். மக்கள் அவர் சொல்லும் பொய்களை நம்புவதில்லை.

வெளிநாட்டில் வைத்து இந்தியாவின் தேர்தல் முறையை இழிவுபடுத்தும் ராகுலின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது, ஜனநாயகத்திற்கு எதிரான, அவசரநிலை கால மனப்பான்மையைக் கொண்ட அவரது போக்கையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வாறு சி.ஆர்.கேசவன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us