தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சர்ச்சையான கார்கேயின் தீபாவளி வாழ்த்து செய்தி: பாஜ கண்டனம்

சர்ச்சையான கார்கேயின் தீபாவளி வாழ்த்து செய்தி: பாஜ கண்டனம்

சர்ச்சையான கார்கேயின் தீபாவளி வாழ்த்து செய்தி: பாஜ கண்டனம்

55


ADDED : நவ 09, 2026 02:52 PM

Follow on GoogleFavourite on Google

55

ADDED : நவ 09, 2026 02:52 PM


55
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:

நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. தலைவர்கள் அனைவரும் வாழ்த்த கூறினர்.

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,'' தீபாவளி என்பது மகிழ்ச்சியின் ஈத் போன்றது. நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான பண்டிகை. இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று,'' எனக்கூறியிருந்தார்.

வாழ்த்து செய்தியில் ஈத் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.அதேநேரத்தில் பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களை திருப்திபடுத்தும் அரசியல் செய்வது மற்றும் மகிழ்ச்சி, கொண்டாட்டத்திற்கான பண்டிகையின் போதும், ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது இதுவே காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ.

ரிமோட்வாயிலாக இயக்கப்படும் காங்கிரஸ் தலைவராக கார்கே உள்ளார். பேட்டரி சக்தியை சோனியா தருகிறார். ராகுலின் கைப்பிடியில் உள்ளார். கார்கே வெளியிட்ட அறிக்கை அனைத்தும், ராகுலின் ஹிந்து விரோத, சனாதன எதிர்ப்பு மன நிலையை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us