தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமராக கடின உழைப்பு வேண்டும்; ராகுலுக்கு பாஜ பதிலடி

பிரதமராக கடின உழைப்பு வேண்டும்; ராகுலுக்கு பாஜ பதிலடி

பிரதமராக கடின உழைப்பு வேண்டும்; ராகுலுக்கு பாஜ பதிலடி

12


ADDED : நவ 01, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

12

ADDED : நவ 01, 2026 05:59 PM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி ராம்லீலா மைதானத்தில் ராகுல் நடத்திய போராட்டம் தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: ராகுல் பேரணி நடத்திய ராம்லீலா மைதானத்தில் 40 சதவீத இடம் காலியாக இருந்தது. இந்த பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ராகுல் கூறினார். ஆனால் மைதானத்தில் போடப்பட்டிருந்த 28 ஆயிரம் நாற்காலிகளில் 7 ஆயிரம் நாற்காலிகள் காலியாக இருந்தன.10 லட்சம் பேர் எங்கே? அதனை காட்ட வேண்டும்.

இதுபோன்ற தந்திரங்களால் ஒருவர் தலைவராகவோ அல்லது பிஎம் ஆகவோ முடியாது. பிஎம் என்றால் பிரதமர் அல்ல. இங்கு பி என்றால் பசீனா( வியர்வை). எம் என்றால் கடின உழைப்பு.வியர்வை மற்றும் கடின உழைப்பால் மட்டுமே ஒருவர் பிரதமர் ஆக முடியும். பல கட்சிகளை ஒன்றிணைத்ததை தவிர அவர்களால் 10 லட்சம் பேரை திரட்ட முடியவில்லை.

2024 தேர்தல் சட்டவிரோதம் என ராகுல் சொல்கிறார். 2024 தேர்தலின் போது ஞானேஷ்குமார் பதவியில் இல்லை. அவர் தலைமை தேர்தல் கமிஷனராக 2025 ல் பதவியேற்றார். 2024 தேர்தல் சட்டவிரோதம் என்றால், ராகுலும் சட்டவிரோத எதிர்க்கட்சி தலைவர். அவரது எம்பிக்களும் சட்டவிரோதமானவர்கள்.

தேர்தல் சட்டவிரோதம் என்றால், நீதிமன்றத்தை நாட வேண்டும். தேர்தலுக்கு எதிராக ராகுலோ, காங்கிரசோ, இண்டி கூட்டணியோ ஏதாவது ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர் என காட்ட முடியுமா? இரண்டரை ஆண்டுகள் கழித்து ராமலீலா மைதானத்தில் தேர்தலை சட்டவிரோதம் என சொல்ல முடியாது.

இந்தியா என்பது ராகுலின் தந்தைக்கு சொந்தமானது இல்லை. இந்திய மக்களுக்கு சொந்தமானது. தேநீர் விற்பவர் பிரதமர் ஆவதும், சாதாரண நபர் உள்துறை அமைச்சர் ஆவதுமே ஜனநாயகம். இதில் உங்களுக்கு என்ன கவலை. இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us