தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விஜய் மனதில் பாஜ: குஷ்பு பேட்டி

விஜய் மனதில் பாஜ: குஷ்பு பேட்டி

விஜய் மனதில் பாஜ: குஷ்பு பேட்டி


ADDED : ஏப் 05, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: '' விஜய் மனதில் பாஜ உள்ளது,'' என பாஜ நிர்வாகி குஷ்பு கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசியலுக்கு விஜய் இப்போது தான் வந்துள்ளார். விமர்சிப்பது பற்றி இல்லை. அரசியல் தெரிந்தவர் பற்றி பேசலாம். நேற்று தான் வந்துள்ளார். நேற்று யாருக்கு ஓட்டு சேகரிக்க போகிறோம் என்பதற்கு அவரது கட்சி வேட்பாளர் பெயரை சொல்லாமல், எங்கள் கட்சி பெயர் வேட்பாளர் பெயரை சொல்லிவிட்டு போனார். மனதில் நாங்கள் இருக்கிறோம். அது உறுதியாகியுள்ளது. விஜய் மனதில் பாஜ உள்ளதுஉறுதியாக இருக்கிறது. மணலி தொகுதியில் பாஜ வேட்பாளர் பெயரை சொன்னது சந்தோஷம்

மக்களை ஏமாற்ற என்னவேண்டுமானாலும் பேசுவீர்கள். பொய் வாக்குறுதி மட்டும் கொடுத்து 5 ஆண்டு ஆட்சி நடத்தினார்கள்.மறுபடியும் பொய் சொல்லி மீண்டும் ஏமாற்ற நினைக்கும் திமுகவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

மாநில அந்தஸ்து

தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வாக்குறுதி கொடுக்க வேண்டுமா? எல்லாமே வரும். அனைத்துக்கும் நேரம் காலம், நடைமுறை உள்ளது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது நல்லது தான். கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால், யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதற்கு பல விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது. பல கட்சிகளுடன் பேச வேண்டி உள்ளது. மாநிலங்களுடன் பேச வேண்டி உள்ளது. இது ஒரு நடைமுறை.

நேற்று வந்து சென்ற தலைவர்கள், ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்குவோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். எப்படி கொடுப்பீர்கள். கார்கே, நிறைய விஷயம் சொல்வார். தனது நாற்காலியை காப்பாற்றுவதற்காக, ராகுல், பிரதமரை தாண்டி ஜனாதிபதி ஆவார் என சொல்வார். ராகுல், ஜனாதிபதி, பிரதமர் ஆவார் எனவும் சொல்வார். நாற்காலியை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்.

ராகுல் பிரதமர் ஆவது தூரத்து கனவு. கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது.அப்துல் கலாம சொன்னது போல் பெரிதாகவே கனவு காணுங்கள். அது ராகுலுக்கும் பொருந்தும். ஆனால், அது எக்காலத்திலும் நடக்கவே நடக்காது. இவ்வாறு குஷ்பு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us