தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மகேஷ் மீதான லஞ்ச வழக்கு; மேலும் 12 பேருக்கு தொடர்பு

மகேஷ் மீதான லஞ்ச வழக்கு; மேலும் 12 பேருக்கு தொடர்பு

மகேஷ் மீதான லஞ்ச வழக்கு; மேலும் 12 பேருக்கு தொடர்பு

10


ADDED : நவ 11, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : நவ 11, 2026 03:58 AM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க, 400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகி உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுடன், மேலும், 12 பேர் கூட்டு சேர்ந்து செயல்பட்டு இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: எங்களை மீறி, அரசு அங்கீகாரம் பெற முடியாது என, தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி, குடும்ப உறுப்பினர்கள், அறக்கட்டளை மற்றும் வணிக வங்கி கணக்குகள், பினாமிகள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள் வாயிலாக, அரசகுமார் உள்ளிட்டோர் பணம் வசூல் செய்துள்ளனர்.

இந்த பணத்தை, நிலம், வீடு, வணிகத்தில் முதலீடு செய்துள்ளனர். இது சட்டப்படி குற்றம். அரசகுமாரின் நடத்தை குறித்து விசாரித்த போது, மிகவும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. அவர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சில தனியார் பள்ளி நிர்வாகிகளிடம், என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது என, மிரட்டியே பணம் வசூலித்துள்ளார்.

தொடர் விசாரணையில், அரசகுமார், அன்பில் மகேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து, பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் ஸ்ரீதர், விழுப்புரம் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகி பழனியப்பன், நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகி சந்திரசேகரன், அரசகுமாரின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ், இன்ஸ்டின், திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபா என்ற சுப்பிரமணியம், திருவாரூர் சுசீந்திரன், தெய்வசிகாமணி, சென்னியப்பன், ஜனகரத்தினம், பேங்க் சுப்பிரமணி என்ற நபர்களுக்கும், இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐகோர்ட்டில் மேல்முறையீடு


தி.மு.க., வழக்கறிஞர் சரவணன் அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். ஏற்கனவே, அவரது முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு, 'மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். முத்துகுமார் சரணடையாமல் உள்ளார்' என, அரசு தரப்பு காரணம் தெரிவித்தது.
தற்போது முத்துகுமாரும் சரணடைந்து விட்டார். மகேஷிடமும் போலீஸ் விசாரணை முடிந்து விட்டது. இருப்பினும், லஞ்சம் கொடுத்தவர்களை சாட்சிகளாக வைத்து, சிறப்பு நீதிமன்றம், மகேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முத்துகுமார் சரணடைந்து, 10 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால், போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்காமல், காலதாமதம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us