1271 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கேன்வா நிறுவனம்
1271 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கேன்வா நிறுவனம்
UPDATED : நவ 04, 2026 12:46 PM
ADDED : நவ 04, 2026 12:27 PM

- நமது சிறப்பு நிருபர் -
வேலையிழப்புகள் மிகவும் கொடுமையானவை. ஒரு நாள் உங்களுக்கு வேலை இருக்கும், மறுநாளே நீங்கள் மீண்டும் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக, முன்னணி ஐடி நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகளவில் 1271 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் சில பேருக்கு வேறு இடத்தில் பணி வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி இந்த ஆண்டு முதன்முறையாகக் குறைந்துள்ளது.
இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுவனம் கையில் எடுத்தது. இந்தியா உட்பட 37 நாடுகளில் இந்த தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 5700 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
நிறுவனத்தின் 13 ஆண்டு கால வரலாற்றில் இதுவே மிகவும் கடினமான முடிவு என்று கேன்வா நிறுவனத்தின் சிஇஓ மெலனி பெர்கின்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சலுகைகளை அறிவித்தது.
* குறைந்தபட்சம் 6 மாத கால சம்பளம் வழங்கப்படும். அடுத்த 12 மாதங்களுக்கான மருத்துவக் காப்பீடு நீட்டிக்கப்படும்.
* ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆபீஸ் மேக்புக் லேப்டாப்களை அவர்களே வைத்து கொள்ளலாம்.
* சொந்தமாக ஸ்டார்ட்-அப் அல்லது புதிய தொழில் தொடங்க விரும்பும் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டாலர் (ரூ.8.4 லட்சம்) வரை நிதியுதவி வழங்கப்படும்.
* புதிய வேலை தேடுவதற்கு ஏதுவாக 'Alumni Directory', லிங்க்ட்இன் பிரீமியம் சந்தா, தொழில்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும்.
* கேன்வா நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
