தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரேஷனில் இனி மேம்படுத்தப்பட்ட அரிசி வழங்கும்படி மத்திய அரசு உத்தரவு

ரேஷனில் இனி மேம்படுத்தப்பட்ட அரிசி வழங்கும்படி மத்திய அரசு உத்தரவு

ரேஷனில் இனி மேம்படுத்தப்பட்ட அரிசி வழங்கும்படி மத்திய அரசு உத்தரவு

6


UPDATED : நவ 13, 2026 05:10 AM

ADDED : நவ 13, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

6

UPDATED : நவ 13, 2026 05:10 AM ADDED : நவ 13, 2026 01:19 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேலும் உயர்த்த, 'இம்ப்ரூவ்ட் ரைஸ்' எனப்படும் மேம் படுத்தப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், உடைந்த அரிசி மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்ப ஆலைகளில் அரிசியாக மாற்றும் பணி, 2027 பிப்ரவரி முதல் தொடங்க வேண்டும்.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர் களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, கார்டுதாரர்கள் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், பச்சரிசி, புழுங்கல் அரிசியை தேவைக்கு ஏற்ற அளவில் வாங்கிக் கொள்ளலாம். இந்த அரிசி, மத்திய அரசின் இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.

தமிழக விவசாயிகளிடம் இருந்து, இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், வாணிப கழகத்தின் அரவை ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசியாக மாற்றப்படுகிறது. இது, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்க மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை. தற்போது, புழுங்கல் அரிசியில் உடைந்த அரிசி, 16 சதவீதமும், பச்சரிசியில், 25 சதவீதமும் இருக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இனி, ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'இம்ப்ரூவ்ட் ரைஸ்' எனப்படும் மேம் படுத்தப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது.

இந்த வகையில் புழுங்கல் அரிசியில் உடைந்த அரிசியின் அளவு, 5 சதவீதம், பச்சரிசியில் உடைந்த அரிசியின் அளவு, 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த அரிசி ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், சோதனை அடிப்படையில் தற்போது வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் வினியோகம் தொடங்குகிறது.

'தரமானதாக இருக்கும்'


மத்திய உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் தரமான அரிசி மட்டுமே வினியோகம் செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக ரேஷன் கடைகளில், தரமான அரிசி வழங்குவதற்காக, 2027 பிப்., முதல் ஆலைகளில் மேம்படுத்தப்பட்ட அரிசி அரைக்கப்பட உள்ளது. அதில், தமிழகத்திற்கு 7.40 லட்சம் டன் வழங்கப்பட உள்ளது. உடைந்த அரிசி அளவு மிகவும் குறைவு என்பதால், அந்த அரிசி தரமானதாக இருக்கும். அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து மேம்படுத்தப்பட்ட அரிசி மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us