sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு

/

வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு

வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு

வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு

5


ADDED : அக் 03, 2025 07:57 PM

Google News

5

ADDED : அக் 03, 2025 07:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் இல்லாத ஒரு வசதி, சுதேசி சமூக வலைதளமான அரட்டை செயலியில் இடம்பெற்றுள்ளதற்கு பயனர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணம் உயர்வு என்பன உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்தார். இதனையடுத்து, அந்நாட்டுக்கு எதிராக மக்களின் மன நிலை மாறியது. சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், சுதேசி சமூக வலைதளம் தேவை என்ற வாதம் வலுத்தது.

அப்போது கடந்த 2021ம் ஆண்டு ஸோகோ நிறுவனம் உருவாக்கிய ' அரட்டை ' சமூகவலைதளத்தின் மீது இந்தியர்களின் கவனம் திரும்பியது. இந்த செயலியானது மற்ற சமூக வலைதளங்கள் போல் அல்லாமல் சாதாரண ஸ்மார்ட் மொபைல்போன்களிலும் வேலை செய்வதும், குறைந்த இணையதள வேகத்திலும் செயல்படுவதும் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து இந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்ய துவங்கினர். தற்போதைய நிலையில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்த செயலியாக இது உள்ளது. சமூக வலைதளத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் அரட்டை முதலிடத்தில் உள்ளது.இந்நிலையில், அரட்டை செயலியில் இருக்கும் புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்டவற்றை மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் மட்டும் பயன்படுத்த முடியும்.

வரவேற்பு

ஆனால் அரட்டை செயலியில் மொபைல்போன், கம்ப்யூட்டர் உடன் ஆண்ட்ராய்டு டிவியிலும் பயன்படுத்த முடியும் என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு டிவியில் அரட்டை செயலியின் அம்சங்களை பெற முடியும் என்பதால், அதற்கு பயனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.



தினமலர் அரட்டை சேனல் லிங்க்:

https://web.arattai.in/@dinamalar






      Dinamalar
      Follow us