'சிக்கன்ஸ் நெக்' எல்லைப்பாதுகாப்பு; அமித் ஷா முக்கிய ஆலோசனை
'சிக்கன்ஸ் நெக்' எல்லைப்பாதுகாப்பு; அமித் ஷா முக்கிய ஆலோசனை
ADDED : ஆக 22, 2026 05:18 PM

கோல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரி காரிடார் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு மாநிலங்களை பிற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நிலப்பகுதியான சிக்கன்ஸ் நெக் எனப்படும் சிலிகுரி காரிடார் பகுதியாகும். இதன் எல்லை அருகே வங்கதேசமும், சீனாவும் தீஸ்தா நதி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளன. இது இந்தியாவின் எல்லையோர பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சிக்கன்ஸ் நெக் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் சீனா, வங்கதேசத்தின் நேரடி அச்சுறுத்தலை எவ்வாறு கையாளுவது மற்றும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று சிலிகுரியில் ராணுவ வீரர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா படா கானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவர்களுடன் உணவு அருந்தினார்.
