லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்
லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்
UPDATED : செப் 06, 2025 05:52 PM
ADDED : செப் 06, 2025 05:38 PM

லண்டன்: லண்டன் பல்கலையில் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், இன்று லண்டனில் உள்ள பல்கலையில் பயின்று வரும் இந்திய மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்; லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் லண்டன் பல்கலை பட்டதாரிகளுடன் சிறப்பான கலந்துரையாடலை நடத்தினேன். திராவிட மாடல், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் பங்கு குறித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். திருக்குறளின் அழியாத வார்த்தைகள் மூலம் தமிழ் கலாசாரத்தின் காலத்தால் அழிக்கப்பட முடியாத புகழை கவுரவித்தேன்.
இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் கண்காட்சியில் கலந்து கொண்டேன். நமது ஜனநாயக மரபு மற்றும் இன்றைய பொருத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்..