தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கோவில் நிலங்களில் விதிமீறல்களை கண்டறிய கமிஷனர் அதிரடி உத்தரவு

கோவில் நிலங்களில் விதிமீறல்களை கண்டறிய கமிஷனர் அதிரடி உத்தரவு

கோவில் நிலங்களில் விதிமீறல்களை கண்டறிய கமிஷனர் அதிரடி உத்தரவு

15


ADDED : நவ 09, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

15

ADDED : நவ 09, 2026 06:28 AM


15
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கோவில் நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான வணிக வளாகங்களை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விதிமீறல்கள் இருந்தால், அது குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்' என, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, அந்த துறையின் கமிஷனர் வினய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைய உள்ளன. அவற்றை ஏராளமானோர் வாடகை மற்றும் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அப்படி எடுத்தவர்கள் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியுள்ளதுடன், உள்வாடகைக்கும் விட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கோவில் நிலம் ஒன்றை குறைந்த வாடகைக்கு எடுத்த ஒருவர், அங்கு விதிகளுக்கு புறம்பாக, 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி பலருக்கு அதிக வாடகைக்கு விட்டிருந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுற்றறிக்கை


இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை, அறநிலையத்துறை கமிஷனர் வினய் உடனடியாக ரத்து செய்தார். இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள கோவில் நிலங்கள் மற்றும் கட்டடங்களை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் வினய் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கை விபரம்: உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின், அனைத்து வணிக குத்தகை இனங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கூடுதல் கடைகள் கட்டியுள்ளனரா, உள்வாடகைக்கு விட்டுள்ளனரா என்பதை, நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்; அலுவலகத்தில் இருந்து கோப்புகளை பார்த்து முடிக்கக்கூடாது.

பழைய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் ஆய்வு செய்ய வேண்டும். புதிதாக முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், ஆதாரங்களுடன் அறிக்கை தயாரிக்க வேண்டும்.

நடவடிக்கை


தீபாவளி முடிந்தவுடன், ஒவ்வொரு அதிகாரியும் தனித்தனியாக விரிவான அறிக்கையை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கோவில் நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள், வாடகை தொடர்பான விஷயங்களில், அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து, பின்னர் பொதுமக்கள் வாயிலாக புகார்கள் அல்லது முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் மற்றும் பதவியிறக்கம் உள்ளிட்ட துறை ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us