பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி: பிரதமர் மோடி
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி: பிரதமர் மோடி
UPDATED : ஜன 07, 2026 10:03 PM
ADDED : ஜன 07, 2026 04:06 PM

புதுடில்லி: '' பயங்கரவாதத்தை அதிக உறுதியுடன் எதிர்த்து போராடுவதற்கு தீர்மானத்தை உறுதிப்படுத்தினோம்,'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசிய பிறகு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசினேன். அவருக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் ஆண்டில் இந்தியா இஸ்ரேல் இடையிலான பிராந்திய உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த பிராந்திய நிலைமை குறித்து கருத்துக்களை பரிமாறி கொண்டோம். பயங்கரவாதத்தை அதிக உறுதியுடன் எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் பகிரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

