ADDED : அக் 05, 2025 04:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜ, அக்கட்சி எதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளது.
மீடியாக்களில் வெளியான தகவலை வைத்து காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், '' இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுக்கு சீன வழங்கிய போர் விமானங்களுக்கு இன்ஜீன்களை சப்ளை செய்வது ஏன் ,'' என கேட்டு இருந்தார்.
இது தொடர்பாக பாஜவின் அமித் மாளவியா, '' இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ள தகவலை மேற்கோள் காட்டியதுடன், அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை. உறுதியான தகவல் இல்லை. காங்கிரஸ் எம்பி இந்தியாவுடன் நிற்பதற்கு பதிலாக எதிரியின் பக்கம் சாய்வதை தேர்வு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.