sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கமேனிக்கு எதிரான விமர்சனம்; கார்த்திக்கு எதிராக போராட்டம்

/

 கமேனிக்கு எதிரான விமர்சனம்; கார்த்திக்கு எதிராக போராட்டம்

 கமேனிக்கு எதிரான விமர்சனம்; கார்த்திக்கு எதிராக போராட்டம்

 கமேனிக்கு எதிரான விமர்சனம்; கார்த்திக்கு எதிராக போராட்டம்

28


ADDED : மார் 05, 2026 05:25 AM

Google News

28

ADDED : மார் 05, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில், காங்., - எம்.பி., கார்த்தி அளித்த பேட்டி: காங்கிரஸ் இருக்கும் அணியைத் தான் சிறுபான்மையினர் நம்புவர். நாம் எப்போதும் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள். வங்கி கடன் தள்ளுபடிக்காக விதி உள்ளது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை, மாநில அரசு தள்ளுபடி செய்ய முடியாது. இலவசங்களில் நேரடி பண வினியோகம் செய்வதை வரவேற்கிறேன்.

போதை பொருட்கள் பரவல் என்பது நாடு முழுதுமுள்ள பிரச்னை. போதை பொருட்கள் வினியோகத்தை தடுக்க வேண்டும். போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் விழிப்புணர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஈரான் நாட்டில் நடந்த தாக்குதலில், அந்நாட்டின் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அளித்த பேட்டியில், கமேனியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது கருத்துக்கு முஸ்லிம் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கூடவே, சிவகங்கை அரண்மனை பகுதியில் கார்த்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, நேற்று ஆர்ப்பாட்டமும் செய்தனர்.






      Dinamalar
      Follow us