/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
/
பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
ADDED : மார் 05, 2026 05:25 AM
சேலம்: தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், சேலம், அஸ்தம்பட்டி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நேற்று, நடந்தது.
சிறப்பு தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில், ''ஓய்வு பெற்ற சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் ஓய்வூதியம், ஒரு லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க, 2016ல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியும் தாமதப்படுத்தாமல், அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். 10 ஆண்டுக்கு மேலாக காலியாக இருக்கும் இளநிலை ஆய்வாளர், 360 பணியிடத்தை நிரப்ப வேண்டும்,'' என்றார்.
மாநில பொதுச்செயலர் ரஹமத்துல்லா, சட்ட ஆலோசகர்கள் ராஜலிங்கம், கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

