டில்லி கார் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி
டில்லி கார் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி
ADDED : நவ 10, 2025 08:56 PM

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடித்த போது ஏற்பட்ட சத்தம் பயங்கரமாக இருந்ததாகவும் வாழ்நாளில் அதனை மறக்க முடியாது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
டில்லி செங்கோட்டையில் மெட்ரோ ஸ்டேசன் நுழைவு வாயில் 1 அருகே கார்குண்டுவெடித்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:
ராஜ்தர் பாண்டே என்பவர் கூறுகையில், கார் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட தீயை எனது வீட்டில் இருந்து பார்த்தேன். என்ன நடக்கிறது என்று வந்து பார்த்தேன். சத்தம் பயங்கரமாக இருந்தது. எனது வாழ்க்கையில் இதுபோன்றது நடந்தது இல்லை. மூன்று முறை இந்த சத்தம் கேட்டது என்றார்.
இர்பான் என்பவர் கூறுகையில், பயங்கரமாக வெடித்தது. நாங்கள் அங்கிருந்து வெளியேற முயன்றோம். ஆனால் முடியவில்லை. உயிரிழப்பு இருக்கலாம் என்றார்.
பல்பீர் என்பவர் கூறியதாவது: எனது காரில் அமர்ந்து இருந்த போது குண்டுவெடித்தது. காரில் இருந்து வெளியே வந்த நான் அங்கிருந்து தப்பிச்சென்றேன் என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத மற்றொருவர் கூறுகையில், நாங்கள் வந்து பார்த்த போது சாலையில் உடல் சிதறி கிடந்தது. என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. ஏராளமான கார்கள் சேதம் அடைந்துள்ளன என்றார்.

