டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
ADDED : செப் 25, 2025 07:49 AM

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாக 13 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் உள்ளூர் மக்களுடன் மக்களாக டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் சொந்த நாட்டில் இருப்பவர்களுடன் ஐஎம்ஓ செயலி மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். சர்வதேச அழைப்புகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்த செயலியின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதும், அவர்களின் குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உரிய சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட நபர்கள் விரைவில் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.