ADDED : நவ 11, 2025 09:27 AM

புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார். அவருக்கு வயது 89.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. இவர் வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இன்று (நவ.,11) அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவர் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தர்மேந்திரா 'ஆயி மிலன் கி பேலா', 'ஃபூல் அவுர் பத்தர்', 'ஆயே தின் பஹார் கே', 'சீதா அவுர் கீதா', 'ராஜா ஜானி', 'ஜுக்னு', 'யாதோன் கி பாராத்', 'தோஸ்த்', 'ஷோலே', 'பிரதிக்ஞா', 'சரஸ்', 'தரம் வீர்' போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்து இருந்தார்.
கடைசியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவர் நடித்து இருந்தார். இவரது மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

