ADDED : டிச 17, 2025 04:00 PM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க எம்பி கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.
அடுத்தாண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. இன்னும் சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவானது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொது மக்கள் நலன் அமைப்புகள் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ளோர் விவரம் தலைமை: கனிமொழி
* டி.கே.எஸ். இளங்கோவன்
* அமைச்சர் கோவி . செழியன்
* அமைச்சர் தியாகராஜன்
* அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
* திமுக அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா
* கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
*எழிலன் நாகநாதன்
*கார்த்திகேய சிவசேனாபதி
*தமிழரசி ரவிக்குமார்
*முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம்
*சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

