sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்

/

திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்

4


ADDED : டிச 29, 2025 04:03 PM

Google News

4

ADDED : டிச 29, 2025 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் சிறார்கள் திரிவதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.

புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது.

சக மனிதரை ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூக வலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது.

பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும், தமிழகம் மீட்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us