தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முதல்வரை அவதுாறாக பேசிய புகார்; திமுக எம்எல்ஏவிடம் 2 மணி நேரம் விசாரணை

முதல்வரை அவதுாறாக பேசிய புகார்; திமுக எம்எல்ஏவிடம் 2 மணி நேரம் விசாரணை

முதல்வரை அவதுாறாக பேசிய புகார்; திமுக எம்எல்ஏவிடம் 2 மணி நேரம் விசாரணை

4


ADDED : அக் 31, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : அக் 31, 2026 05:55 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சியில் தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அக்கட்சியின் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசினார். இதுபற்றி த.வெ.க., சார்பில், சென்னை அண்ணாநகர் மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி, வசந்தம் கார்த்திகேயனுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதன்படி ஆஜரான அவரிடம், 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின், வசந்தம் கார்த்திகேயன் கூறியதாவது: முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசியதாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்காக அழைத்ததால் ஆஜரானேன். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பற்றி, சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த செய்கையை கண்டிக்கும் வகையில், கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

தி.மு.க.,வில் யாரெல்லாம் சிறப்பாக செயல்படுகின்றனரோ, அவர்களை குறி வைத்து பழிவாங்க நினைக்கின்றனர். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us