தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தபால் ஓட்டுகள் எண்ணிக்கை ஜாக்கிரதை; ஏஜன்டுகளுக்கு தி.மு.க., உத்தரவு

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை ஜாக்கிரதை; ஏஜன்டுகளுக்கு தி.மு.க., உத்தரவு

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை ஜாக்கிரதை; ஏஜன்டுகளுக்கு தி.மு.க., உத்தரவு


ADDED : மே 03, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 06:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: 'சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை நாளை (மே 4) எண்ணும்போது தபால் ஓட்டுகளில் குழப்பம் இருப்பது தெரியவந்தால், கடைசி 3 ரவுண்ட் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் ஓட்டுகளை எண்ணவிடாமல் தடுத்து நிறுத்தி வையுங்கள். எக்காரணம் கொண்டும் மையத்தை விட்டு வெளியேறிவிட வேண்டாம்' என தி.மு.க., ஏஜன்டுகளுக்கு அக்கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 5.73 கோடி ஓட்டுகளில் 4.88 கோடி (85.10 சதவீதம்) ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த ஓட்டுகள் எண்ணும் பணி நாளை (மே 4) நடக்கிறது. முதலில் காலை 8:00 முதல் 8:30 மணி வரை தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். இவை அரசியல் கட்சிகள் நியமித்துள்ள ஏஜன்டுகள், வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.

தி.மு.க., ஏஜென்டுகளுக்கு உத்தரவு

இதற்கிடையே அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என தி.மு.க., ஏஜன்டுகளுக்கு அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆன்லைன் பயிற்சி அளித்து ஆலோசனைகளை வழங்கினர்.

இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: தேர்தல் கமிஷன் மீது ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு இம்முறை ஏதோ ஒருவகையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட ஏஜன்டுகளை அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இம்முறை தி.மு.க., ஏஜன்டுகளாக வழக்கறிஞர்களையே நியமித்துள்ளது.

'2016 சட்டசபை தேர்தலில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு 49 ஓட்டுகளில் தோல்வியுற்றதாகவும், அ.தி.மு.க., வேட்பாளர் இன்பதுரை வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. அப்பாவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, வெற்றி பெற்றதாக நீதியை பெற்றாலும், அதற்குள் இன்பதுரையின் பதவிக் காலம் முடிந்து அடுத்த தேர்தலும் நடந்து விட்டது' என்பதை இளங்கோவன் உதாரணமாக குறிப்பிட்டார்.

குறைந்த ஓட்டுகள் வித்தியாசம் ஏற்படும் தொகுதிகளில் தபால் ஓட்டுகள் வெற்றியை முடிவு செய்யும். குறிப்பாக, த.வெ.க.,வால் ஓட்டுகள் பிரிந்தால் குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும் நிலை ஏற்படலாம்.

எனவே முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுகளில் குழப்பம் இருந்தால் கடைசி மூன்று ரவுண்டுகள் எண்ண வேண்டிய மின்னணு இயந்திர ஓட்டுப்பதிவுகளை எண்ண விடாதீர்கள். நிறுத்தி வைத்துவிடுங்கள்.

மையத்தை விட்டும் வெளியேறிவிட வேண்டாம். தேர்தல் கமிஷன் உரிய விளக்கம் அளித்த பின்பு அதுகுறித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் குழு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us