தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., வெற்றி பெறும்!: 'டங் ஸ்லிப்'பான ஆதவ்

தி.மு.க., வெற்றி பெறும்!: 'டங் ஸ்லிப்'பான ஆதவ்

தி.மு.க., வெற்றி பெறும்!: 'டங் ஸ்லிப்'பான ஆதவ்


ADDED : ஏப் 05, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.,வின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, 'சென்னையில் தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும்' என மாற்றிப்பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில், த.வெ.க., வேட்பாளராக போட்டியிடும் ஆதவ், அங்கு பிரச்சாரம் செய்தபோது, “வட சென்னையில், தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் மனநிலை மாறிவிட்டது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 13 இடங்களில் தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும்,” என்றார்.

த.வெ.க., என்று சொல்வதற்கு பதில், 'டங் ஸ்லிப்'பாகி, தி.மு.க., என கூறியதால், சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சில நொடிகளிலேயே, சுதாரித்துக் கொண்ட அதவ் அர்ஜுனா, தி.மு.க.,வை விமர்சித்து பேசத் துவங்கினார்.

ஆனால், தான் தெரிவித்த கருத்துக்காக வருத்தம் தெரிவித்து, மாற்றி சொல்லவில்லை.

இதற்கிடையே, ஆதவை எதிர்த்து, தி.மு.க., சார்பில், ஆதவின் நண்பர் கார்த்திக் மோகன் நிற்பதால், அவருக்கு வெற்றியை வழங்கி விட்டாரா என, சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us