உள்நாட்டில் தயாரித்த 'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்பு; ரூ.30 ஆயிரம் கோடிக்கு டெண்டர்
உள்நாட்டில் தயாரித்த 'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்பு; ரூ.30 ஆயிரம் கோடிக்கு டெண்டர்
UPDATED : செப் 27, 2025 05:40 PM
ADDED : செப் 27, 2025 05:39 PM

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்காக, பெல் நிறுவனத்துக்கு இந்திய ராணுவம் ரூ.30,000 கோடிக்கு டெண்டர் வழங்கியுள்ளது.
'அனந்த் சாஸ்திரா' என்பது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,) சார்பில் உருவாக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு. எதிரியின் விமானப்படை மற்றும் ட்ரோன்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய வான்வெளியைப் பாதுகாப்பது இதன் முக்கிய நோக்கம்.
இது எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறனைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறையில், உள்நாட்டு மயமாக்கலுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த,'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய இந்த வான் பாதுகாப்பு அமைப்பை, 5 அல்லது 6 எண்ணிக்கையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து வாங்கிக்கொள்வதற்காக, இந்திய ராணுவம் ரூ. 30,000 கோடிக்கு டெண்டர் வழங்கியுள்ளது.
'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்பு ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
இந்திய ராணுவத்தின் AAD, MR-SAM, ஆகாஷ் மற்றும் பிற சிறிய வான் பாதுகாப்பு அமைப்புகளை இயக்குகிறது. எந்தவொரு வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்க இந்திய விமானப்படையுடன் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.