அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை 17% சரிவு; ஆய்வறிக்கையில் தகவல்
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை 17% சரிவு; ஆய்வறிக்கையில் தகவல்
ADDED : நவ 18, 2025 08:25 AM

வாஷிங்டன்: 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17 சதவீதம் சரிந்துள்ளது என சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படும், 'ஓபன் டோர்ஸ் டேட்டா' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவில் நடப்பு கல்வியாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, 17 சதவீதம் குறைந்துள்ளது. விசா பிரச்னை, பயண கட்டுப்பாடு போன்றவை இதற்கான காரணங்களாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின், 61 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்கள் சேர்க்கை சரிவடைந்ததாக கூறியுள்ளது. இருப்பினும் 2024 - 25 ஒட்டுமொத்த கல்வி ஆண்டில், 3.63 லட்சம் இந்திய மாணவர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2024-2025ம் கல்வியாண்டில் 12 லட்சம் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் படித்தனர். அவர்கள் 2024ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 55 பில்லியன் டாலர் பங்களித்தனர் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

