சவுதி அரேபியாவிற்கு F-35 ரக விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப் தகவல்
சவுதி அரேபியாவிற்கு F-35 ரக விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப் தகவல்
ADDED : நவ 18, 2025 07:30 AM

வாஷிங்டன்: சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகைக்கு முன்னதாக, அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். இது ஏழு ஆண்டுகளுக்கும் பிறகு அமெரிக்காவிற்கு அவர் செல்கிறார். இந்ந சூழலில் சவுதி அரேபியாவுடனான F-35 ஜெட் விமானங்கள் ஒப்பந்தம் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
நான் சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன். அவர்கள் வாங்க விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு சிறந்த கூட்டாளியாக இருந்திருக்கிறார்கள். நாங்கள் F-35 போர் விமானங்களை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்வோம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜமால் கஷோகி வெட்டப்பட்டதன் மூலம், இளவரசர் முகமதுவின் கடைசி அமெரிக்க பயணத்திற்குப் பிறகு, உறவு பாதிக்கப்பட்டது. இந்த கொலையில் சவுதி அரேபியா இளவரசர் பின்னணியில் இருந்து இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்தன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க-சவூதி உறவில் இருந்த இருண்ட மேகங்களை டிரம்ப் அகற்றியுள்ளார்.
சவூதி அரேபியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக சீனா கடந்த ஆண்டு அமெரிக்காவை விஞ்சியது. ஆனால் அமெரிக்கா ஆயுத விற்பனையில் சவுதி அரேபியாவின் விருப்பமான நாடாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

