sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை; வன்முறையில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியான வழக்கு

/

 வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை; வன்முறையில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியான வழக்கு

 வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை; வன்முறையில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியான வழக்கு

 வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை; வன்முறையில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியான வழக்கு

1


ADDED : நவ 18, 2025 07:11 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலையில், இடஒதுக்கீடுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு ஜூனில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

துரோகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். 'சுதந்திர போராட்ட தியாகிகளின் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள்' என, அப்போது பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி ஷேக் ஹசீனா பேட்டி அளித்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், ஜூலையில் நாடு முழுதும் போராட்டத்தை விரிவுபடுத்தினர்.

இந்த போராட்டங்களை தடுக்க போலீசார், பாதுகாப்பு படையினர் மற்றும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது.

மோதல் தலைநகர் டாக்காவிலும், பிற நகரங்களிலும் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.

டாக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கலவரம் மேலும் தீவிரமடைந்தது.

நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ல் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடந்த கலவரத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக வங்கதேச சுகாதார துறையும், 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனும் கூறின.

வங்கதேச வரலாற்றில் நடந்த மிக மோசமான கலவரங்களில் ஒன்றாக இது அமைந்தது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடிய பின், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இந்த கலவரம் குறித்து விசாரிக்க, வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்பாயம் என்ற சிறப்பு நீதிமன்றத்தை, முகமது யூனுஸ் அரசு அமைத்தது.

அதில், ஷேக் ஹசீனா மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்தவர் என, அரசு சார்பில் வாதிடப்பட்டது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

நீதிமன்ற வளாகத்தை சுற்றியும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். காலை 11:55க்கு நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

சந்தேகம் அதில், '2024 ஜூலை போராட்டத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனாவே பொறுப்பு. அவரே இந்த படுகொலைகளுக்கு மூளையாகச் செயல் பட்டவர்.

'இது, சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது' என தெரிவித்தனர்.

இது நாடு முழுதும் நேரலையில் ஒளிபரப்பபட்டது. மேலும், இந்த வழக்கில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அசாதுசாமன் கான் கமலுக்கும் மரண

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமா இந்தியா? ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரை ஒப்படைக்கும்படி, இந்திய அரசிடம் வங்கதேச அரசு கோரியுள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'நம் நெருங்கிய நாடான வங்கதேசத்தில், மக்களின் அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை போன்ற நலன்களுக்கு இந்தியா எப்போது உறுதுணையாக இருக்கும். அதற்காக அந்நாட்டுடன் இணைந்து செயல் படுவோம்' என கூறப்பட்டுள்ளது. ஆனால், தீர்ப்பு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஹசீனாவை ஒப்படைப்பது தொடர்பாகவும் மத்திய அரசு தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.








      Dinamalar
      Follow us