ADDED : நவ 11, 2025 07:31 AM

தஞ்சாவூரில், இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்க்கவில்லை. தமிழக அரசு கால அவகாசம் கேட்டதை, தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும். அ.தி.மு.க., ஒரு ஜனநாயக வடிவம்.
தி.மு.க., இருப்பது எவ்வளவு நல்லதோ; அந்த அளவுக்கு ஜனநாயக கட்சிகள் இருப்பது நல்லது. அந்த வடிவில் அ.தி.மு.க.,வை பார்க்கிறோம். ஆனால், பழனிசாமியின் குரல், ஆர்.எஸ்.எஸ்., குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், இ. கம்யூ., கட்சி ஆறு இடங்களில் போட்டியிட்டது. வரும் தேர்தலில், சில இடங்களை அதிகப்படுத்தி கேட்போம். வாக்காளர் சீர்திருத்தம் நடந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இந்தியா முழுதும் இரண்டு கோடி ஓட்டுகளை தனித்து எங்களால் பெற முடியும்; 10 அல்லது 20 எம்.பி.,க்கள் லோக்சபாவிற்கு செல்வர்.
பொதுக்கூட்டத்துக்கு வைப்புத்தொகை கட்ட வேண்டும் என கூறுவது, ஜனநாயகத்துக்கு நெருக்கடி கொடுப்பதாகும். பல கட்சிகள் உள்ள நாட்டில், பொதுக்கூட்டம் கூட்டுவது, ஆர்ப்பாட்டம் செய்வது, மக்களை நேரடியாக சந்திப்பது எல்லாம் உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.

