ரூ.7 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் மின்வாரிய இன்ஜினியர்
ரூ.7 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் மின்வாரிய இன்ஜினியர்
ADDED : நவ 25, 2025 02:59 PM

தென்காசி: தென்காசி, வீரகேரளம் புதூரில் விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த், அவரது நண்பர் துரை ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ்,30. இவர் தனது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்தை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராக பிரேம் ஆனந்த் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகணேஷ் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அப்போது லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரம் பணத்தை வழங்க அறிவுறுத்தி உள்ளனர். பின்னர், பிரேம் ஆனந்தை சந்தித்து ரூ.7 ஆயிரம் பணம் கொடுக்க செல்வகணேஷ் கொடுத்துள்ளார்.
அதற்கு வீ.கே.புரத்தை சேர்ந்த தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு பிரேம் ஆனந்த் கூறியுள்ளார்.அந்த லஞ்சப்பணத்தை துரை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் பிரேம் ஆனந்த் மற்றும் துரை ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

