உள்ளடக்கத்திற்கு செல்ல

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையால் தோல்வி: சொல்கிறார் டிரம்ப்
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையால் தோல்வி: சொல்கிறார் டிரம்ப்
ADDED : நவ 09, 2026 06:46 PM

அ நிறம் | அளவு
வாஷிங்டன்:அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தலில், அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்தது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இது தொடர்பாக அமெரிக்க டிவிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: எல்லைகளை மூடியதற்காக எனக்கு ஏ பிளஸ் கிரேடு கிடைத்து இருக்கிறது என நினைக்கிறேன். கெட்டவர்களை வெளியேற்றியதால் எனக்கு அதிக மதிப்பெண் கிடைத்தது.நல்ல பணியில் இருந்தவர்களையும் நாங்கள் அகற்றினோம். அவர்கள் விதிகளை மீறியோ அல்லது சட்டத்தை உடைத்தோ நாட்டிற்குள் வந்தவர்கள். அவர்களை வெளியேற்றியதால் நான் பாதிக்கப்பட்டேன். அது கடுமையாக பாதித்தது என நினைக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
