sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மண் அள்ளுவதை தடுத்த பெண் ஐ.பி.எஸ்.,: 'வீடியோ' மூலம் துணை முதல்வர் மிரட்டல்

/

மண் அள்ளுவதை தடுத்த பெண் ஐ.பி.எஸ்.,: 'வீடியோ' மூலம் துணை முதல்வர் மிரட்டல்

மண் அள்ளுவதை தடுத்த பெண் ஐ.பி.எஸ்.,: 'வீடியோ' மூலம் துணை முதல்வர் மிரட்டல்

மண் அள்ளுவதை தடுத்த பெண் ஐ.பி.எஸ்.,: 'வீடியோ' மூலம் துணை முதல்வர் மிரட்டல்


ADDED : செப் 06, 2025 12:38 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில், சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுத்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை, அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூ ட்டணி ஆட்சி அமைந்து உ ள்ளது.

சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்.,கைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வர்களாக உள்ளனர்.

ஆத்திரம் இங் குள்ள சோலாப்பூர் மாவட்டம் குர்து கிராமத்தில், கும்பல் ஒன்று சட்டவிரோதமாக மண் அள்ளியது. இது தொடர்பான புகாரை அடுத்து, சம்பவ இடத்துக்கு பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா நேற் று சென்றார். மண் அள்ளுவதை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

அப்போது, அங்கிருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த பாபா ஜெகதீப் என்பவர், உடனடியாக துணை முதல்வர் அஜித் பவாருக்கு போன் செய்தார். அவர் பேசுவதாக கூறி, மொபைல் போனை அதிகாரி அஞ்சனாவிடம் பாபா ஜெகதீப் கொடுத்தார்.

அப்போது, 'நான் துணை முதல்வர் பேசுகிறேன். நீங்கள் அங்கிருந்து செல்லுங்கள்' என, அஜித் பவார் கூறினார். அ தற்கு பதிலளித்த அஞ்சனா, 'நீங்கள் பேசுவது புரியவில்லை. நிஜமாகவே நீங்கள் துணை முதல்வர் தானா என்பது தெரியவில்லை. என்னுடைய மொபைல் போனில் வீடியோ காலில் வந்து பேசுங்கள் ' என தெரிவித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அஜித் பவார், 'துணை முதல்வர் என்று கூறியும், வீடியோ காலில் அழைக்க சொல்கிறீர்கள்; எவ்வளவு தைரியம் உங்களுக்கு? உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். என் மொபைல் போன் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். என் முகத்தை பார்க்க வேண்டுமென்றால், 'வாட்ஸாப்' அழைப்பில் வாருங்கள். அப்போது நீங்கள் என்னை அடையாளம் காணலாம்' என, கூறி அழைப்பை துண்டித்தார்.

சில நிமிடங்களுக்கு பின், துணை முதல்வர் அஜித் பவார், ஐ.பி.எஸ்., அதிகாரி அஞ்சனாவுக்கு, 'வாட்ஸாப்' வீடியோ அழைப்பு மூலமாக பேசினார்.

சமூக வலைதளம் அப்போது, 'மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, கூறியதுடன், அவரது செயலை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ - வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கேரளாவில் இருந்து சமீபத்தில் மாற்றலாகி வந்ததால், ஐ.பி.எஸ்., அதிகாரி அஞ்சனாவுக்கு அஜித் பவார் மொபைல் போன் எண்ணோ, அவரைப் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அதனால் அவர் அப்படி பேசியுள்ளார்' என்றும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பவார் விளக்கம்

இது குறித்து தன் சமூக வலைதளத்தில் அஜித் பவார் கூறுகையில், 'வெளிப்படையான நிர்வாகத்தை எப்போதும் நான் ஆதரிக்கிறேன். மண் அள்ளுதல் உட்பட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும், சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும் என, உறுதியாக நம்புகிறேன். சோலாப்பூர் விவகாரத்தை பொறுத்தவரை, சட்ட நடவடிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. மாறாக, அங்கு நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்யவே அவ்வாறு நடந்து கொண்டேன்' என, தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us