sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

/

 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

2


UPDATED : மார் 01, 2026 03:05 AM

ADDED : மார் 01, 2026 01:57 AM

Google News

2

UPDATED : மார் 01, 2026 03:05 AM ADDED : மார் 01, 2026 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தை போலவே இங்கும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. ஆளும் திரிணமுல் காங்கிரசின் பலத்த எதிர்ப்புக்கு இடையே இந்த பணி நடந்தது. உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.

மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன், 7.66 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், கடந்த ஆண்டு டிசம்பரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

அதில், 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை அடுத்து, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 7.08 கோடியாக குறைந்தது.

பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கு பின், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது.

அதில், இடம்பெயர்வு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு உள்ளிட்ட காரணங்களால், 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.04 கோடியாக குறைந்துள்ளது.

இது தவிர, 'தர்க்க ரீதியான முரண்பாடுகள்' இருப்பதாகக் கூறி, 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்காமல் தேர்தல் கமிஷன் நிறுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்து, மாவட்ட நீதிபதிகள் துணை பட்டியல்களை வெளியிடுவர் என, கூறப்படுகிறது.

வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள நாடியா மாவட்டத்தில், அதிகபட்சமாக, 2.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பெயர் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா தொகுதியில்

47,000 பேர் நீக்கம்



முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில் மட்டும், 47,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன், 2,06,295 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, 1,59,295 வாக்காளர்கள் உள்ளனர். தவிர, 14,154 வாக்காளர்களின் பெயர்கள் ஆய்வில் உள்ளன. இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். 2021 தேர்தலில், 58,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். தற்போது நீக்கப்பட்டுள்ள, 47,000 வாக்காளர்கள் அந்த வெற்றி வித்தியாசத்திற்கு நெருக்கமாக இருப்பதால், இது வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தேர்தல் எப்போது?


தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பே, தேர்தல் கமிஷனின் முழு குழு ஆய்வு நடத்தும். நேற்று தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஹோலி பண்டிகைக்கு பின் தேர்தல் கமிஷனின் குழு மேற்கு வங்கத்திற்கு வருகை தரும். எனினும், மூன்று கட்டங்களுக்கு மேல் ஓட்டுப்பதிவு நடத்த வாய்ப்பில்லை. இதன்படி, அடுத்த வாரம் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us