அதிகரிக்கும் தங்க கடன்கள் பிஸியாகும் நிதி நிறுவனங்கள்
அதிகரிக்கும் தங்க கடன்கள் பிஸியாகும் நிதி நிறுவனங்கள்
UPDATED : நவ 26, 2025 01:50 PM
ADDED : நவ 26, 2025 06:34 AM

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நம் நாட்டில் சிறு கடன் வளர்ச்சியில் தங்க கடன்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக, கிரிப் என்ற நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தங்க கடன் வளர்ச்சி 53 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மொத்த சிறு கடன் மதிப்பில், தங்க கடன்கள் 27 சதவீத பங்களிப்புடன் உள்ளன. பொதுத் துறை வங்கிகள் அதிகளவு தங்க நகைக் கடன்களை வழங்கியுள்ளன. செப்டம்பர் மாத இறுதிவரை, தங்க நகைக் கடன் வழங்கியது 36 சதவீதம் உயர்ந்து, 14.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிறு கடன் வளர்ச்சியில், தங்க நகைக் கடன் வழங்குவது அதிகரித்து வருவதால், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, இந்நிறுவனங்கள், ஓராண்டுக்குள் தங்க நகைக் கடன் வழங்குவதற்காக, பிரத்யேகமாக 3,000 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

