தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/முதல் தனியார் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 2027 மார்ச்சில் விண்ணில் பாய்கிறது

முதல் தனியார் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 2027 மார்ச்சில் விண்ணில் பாய்கிறது

முதல் தனியார் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 2027 மார்ச்சில் விண்ணில் பாய்கிறது

1


ADDED : நவ 25, 2026 10:09 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 25, 2026 10:09 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை வடிவமைத்து அதிகம் பயன்படுத்துகிறது.

செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதைகளில் நிலை நிறுத்துவதில் இந்த ராக்கெட்டுகள் முக்கிய பங்கு உள்ளன. இதனால், பிஎஸ்எல்வி இஸ்ரோவின் நம்பகமான ராக்கெட்டாக உள்ளது.

தற்போது, விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கி ராக்கெட்டுகளை தயாரித்து வாங்க, 'நியூஸ் பேஸ் இந்தியா' என்ற நிறுவனம் அரசால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் ஐந்து பிஎஸ்எல்வி எக்ஸ் எல் ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான 860 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை, 'எச்ஏஎல் - எல் அண்டு டி' நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு வழங்கியது.

இந்த கூட்டமைப்பு தயாரித்து வரும் முதல் பிஎஸ்எல்வி ராக்கெட்டை, 2027 மார்சுக்குள் விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us