தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் விமானம், வங்கி சேவைகள் முடங்கின! தொழில்நுட்ப கோளாறுகளால் நீடிக்கும் பாதிப்புகள்

அமெரிக்காவில் விமானம், வங்கி சேவைகள் முடங்கின! தொழில்நுட்ப கோளாறுகளால் நீடிக்கும் பாதிப்புகள்

அமெரிக்காவில் விமானம், வங்கி சேவைகள் முடங்கின! தொழில்நுட்ப கோளாறுகளால் நீடிக்கும் பாதிப்புகள்


ADDED : நவ 17, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 10:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட, தொழில்நுட்ப மற்றும் இணைய சேவை கோளாறுகள் காரணமாக, பல முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும், விமானம், வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல சேவைகள் பாதிக்கப்பட்டன. 'மைக்ரோசாப்ட்' மென்பொருள் நிறுவனத்தின் சேவைகளில் கடந்த வாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உலகெங்கிலும் முக்கிய அலுவலக தொடர்பு செயலிகள் முடங்கின.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை அலுவலகங்களின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. மின்னஞ்சல், ஆன்லைன் கூட்டங்கள் உள்ளிட்டவை முடங்கியதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

குறிப்பிட்ட சேவைகள் வழங்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்று, 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் கூறியது.

விமான சேவை


இது ஒருபுறமிருக்க, விமான போக்குவரத்து துறையின் தொலைத் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், நாடு முழுதும், மூன்று நாட்களுக்கு மேலாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த, 1980களில் பயன்படுத்தப்பட்ட சிறிய தாமிர வயர் இணைப்புகளைத்தான் அமெரிக்கா தற்போதும் நம்பியுள்ளது. அதிகளவில் தரவுகளின் சுமையால் இதில் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக, தினமும், 8,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டன. இது நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில், 'யுனைடெட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் கணினி உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், அதன் விமான சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன.

வங்கி சேவை


இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் நேற்று முடங்கின. 'பாங்க் ஆப் அமெரிக்கா, சேஸ், ஜேபிமார்கன், யு.எஸ்., பேங்க், வெல்ஸ் பர்கோ' போன்ற வங்கிகள் மற்றும் 'ஸெல்லே' என்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளம் உள்ளிட்டவைகளின் ஆன்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் அணுகுவது மற்றும் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிரமங்களை சந்தித்தனர்.

178 இணையதளங்கள் முடங்கின


'ஆப்டிமைஸ்லி' என்ற இணையதள மேம்பாட்டு தளத்தின் வாயிலாக உலகளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 178 நிறுவனங்களை குறி வைத்து சைபர் தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது.

உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள், தங்கள் இணையதள பக்கங்களில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை சோதித்து பார்க்க, 'ஆப்டிமைஸ்லி' என்ற இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

இத்தளத்தில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை பயன்படுத்தி, 'ஹேக்கர்' எனப்படும் இணையத் திருடர்கள், இணையதளங்களுக்கான, 'ஸ்கிரிப்ட்' எனும் இயக்க அமைப்புகளை தங்களுக்கு தேவையான தகவல்களை திருடுவதற்கு ஏற்ப மாற்றியது கண்டறியப்பட்டது.

'கிரிப்டோகரன்சி' எனப்படும், மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகளை தங்கள் கணக்குக்கு மாற்றுவது, ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உள்ளிடும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ரகசிய எண்களை திருடுவது, பயனர்களின் ஆன்லைன் கணக்குகளை தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். மேலும், 'ஐபோன்'களுக்கான இயங்கு தளத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும் முயற்சியில் ஹேக்கர்கள் ஈடுபட்டனர்.

இதனால், அமெரிக்காவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. 'சி.என்.என்., -- பி.பி.சி., - பாக்ஸ் நியூஸ்' உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், ஜூம், எச்.எஸ்.பி.சி., சேல்ஸ்போர்ஸ், ஐகியா உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப மற்றும் நிதி நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாயின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us