உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 17, 2026 09:45 PM

அ நிறம் | அளவு
கடலுார்: பட்டா மாற்ற 'ஜி-பே'வில் லஞ்சம் வாங்கிய புகார் உறுதியானதை தொடர்ந்து சர்வேயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெய்வேலி நில ஆர்ஜித சிறப்பு தாலுகா அலுவலகத்தில் நில அளவை துணை ஆய்வாளராக பணிபுரிந்தவர் குணசேகரன். இவர், இதற்கு முன் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நில அளவை துணை ஆய்வாளராக பணியாற்றிய போது, காடாம்புலியூரில் பட்டா மாறுதலுக்காக 'ஜி-பே'வில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இப்புகார் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குணசேகரன் 'ஜி-பே'வில் லஞ்சம் பெற்றது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, குணசேகரனை, சஸ்பெண்ட் செய்து, நில அளவைத்துறை உதவி இயக்குநர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
