ஜி20 மாநாடு: தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
ஜி20 மாநாடு: தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
ADDED : நவ 21, 2025 07:03 PM

ஜோகன்னஸ்பெர்க்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி20 அமைப்பு மாநாடு, ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென் ஆப்ரிக்காவில் நவ.,21 முதல் 23 வரை நடைபெற உள்ளது. வளரும் நாடுகளில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இம்மாநாடு நடத்தப்படுகிறது. முதலில் 2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023 ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் இம்மாநாடு நடந்தது.
இந்தாண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இன்று(நவ., 21) பிரதமர் மோடி விமானம் மூலம் கிளம்பினார். மாலை அவர் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி விவாதிக்கிறார்.
ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாகவும் சந்திப்பு நடத்துகிறார்.

