தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
ADDED : அக் 10, 2025 09:46 AM

சென்னை: சென்னையில் இன்று( அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் இரண்டு முறை கூட தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் ( அக்டோபர் 8), ஆபரண தங்கம், கிராம், 11,385 ரூபாய்க்கும், சவரன், 91,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக்டோபர் 9) காலை தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் உயர்ந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 11,425 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு அதிரடியாக, 6 ரூபாய் உயர்ந்து, 177 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக, தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.