தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு
ADDED : நவ 11, 2025 10:25 AM

சென்னை: சென்னையில் இன்று (நவ., 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரன், 90,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை.
நேற்று (நவ.,10) காலை தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 11,410 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 91,280 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 167 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 11,480 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் உயர்ந்து, 91,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 1,440 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 169 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (நவ., 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனையாகிறது.

