டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது அரசு
டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது அரசு
ADDED : நவ 23, 2025 02:44 AM

புதுடில்லி: டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியதால், சமீபத்தில் திருத்தப்பட்ட காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
டில்லியில், குளிர்காலத்தில் காற்று மாசு பிரச்னை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காற்றின் தரம் குறையும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.
இதன்படி, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று தரக்குறியீடு, 450 என்ற மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
இதையடுத்து, ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும், காற்று மாசு கட்டுப்பாடுகளுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் காற்றின் தரம் குறித்து சமீப ஆண்டுகளில் திரட்டப்பட்ட நிபுணர்களின் பரிந்துரைகளின்படி நான்காம் நிலையில் உள்ள தரக்கட்டுப்பாடுகளை, மூன்றாம் நிலைக்கு மாற்ற காற்று தர ஒழுங்குமுறை கமிஷன் பரிந்துரைத்தது.
இதன்படி, காற்று மாசு கட்டுப்பாட்டின் தரநிலை, 401 - 450 என்ற மிகவும் மோசமான நிலையை எட்டியதால், நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, டில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

