sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மகா மறுமலர்ச்சி அணை; செப்.,9ல் திறக்கிறது எத்தியோப்பியா!

/

மகா மறுமலர்ச்சி அணை; செப்.,9ல் திறக்கிறது எத்தியோப்பியா!

மகா மறுமலர்ச்சி அணை; செப்.,9ல் திறக்கிறது எத்தியோப்பியா!

மகா மறுமலர்ச்சி அணை; செப்.,9ல் திறக்கிறது எத்தியோப்பியா!

2


ADDED : செப் 07, 2025 09:50 PM

Google News

2

ADDED : செப் 07, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிஸ் அபாபா: எகிப்து நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி, மிகப்பெரிய அணையை கட்டி முடித்துள்ள எத்தியோப்பியா, அதை செப்.,9ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கிறது.

வெள்ளை நைல், நீல நைல் என்ற இரு நதிகள் இணைந்த நைல் நதி, ஆப்பிரிக்க நாடுகளை வளப்படுத்துகிறது. வெள்ளை நைல், மத்திய ஆப்பிரிக்காவில் உற்பத்தியாகிறது. நீல நைல், எத்தியோப்பியாவில் உற்பத்தியாகிறது. சூடான் தலைநகர் கார்த்துாம் அருகே இரு நைல் நதிகளும் இணைகின்றன. அங்கிருந்து எகிப்து வழியாக பாயும் நைல், கடலில் கலக்கிறது.1920ம் ஆண்டு அப்போது காலனி ஆட்சி நடத்திய பிரிட்டிஷார் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, நைல் நதியின் தண்ணீரின் பெரும்பகுதியை எகிப்து நாடு பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நைல் நதிக்கு பெருமளவு தண்ணீரை வழங்கும் அதன் உப நதியான் நீல நைல் நதியின் குறுக்கே அணை கட்ட எத்தியோப்பியா 2009ல் முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு எகிப்து எதிர்ப்பு தெரிவித்தது; சர்வதேச நிதி அமைப்புகளிடமும், பிற நாடுகளிடமும் பிரசாரம் செய்து நிதி கிடைக்காமல் செய்தது.

ஆனால், உள்நாட்டு மக்களிடம் திரட்டிய நிதி, வெளிநாட்டில் வசிக்கும் எத்தியோப்பிய மக்களிடம் திரட்டிய நிதி, வெளிநாடுகளில் கிடைத்த குறைந்த நிதியை கொண்டு எத்தியோப்பியா அரசு, 2011ல் அணையை கட்டத் தொடங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் எகிப்து நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்து ராணுவ ஆட்சி ஏற்பட்டது. அந்த பிரச்னைகளை சமாளிக்கவே எகிப்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அதை பயன்படுத்திக் கொண்ட எத்தியோப்பியா அணை கட்டும் பணியை வேகப்படுத்தியது.

கடந்த 14 ஆண்டுகளாக நடந்த பணிகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. அணை கட்டுவதற்கான மொத்தச் செலவு, இந்திய மதிப்பில் 44 ஆயிரம் கோடி ரூபாய். அணை நீர்த்தேக்கப் பரப்பு, 1875 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் 74 பில்லியன் கன மீட்டர் (2620 டிஎம்சி) தண்ணீரை சேகரிக்க முடியும்.

மேட்டூர் அணை 120 அடி நிரம்பும் பட்சத்தில் அதில் தேங்கியிருக்கும் தண்ணீர் 93.47 டி.எம்.சி., என்பதை ஒப்பிட்டால், எத்தியோப்பியா கட்டியது எத்தனை பெரிய அணை என்பது புரியும்.இது, உலகின் பெரிய அணைகளில் ஒன்று. இதன் மூலம், 5.15 ஜிகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இப்படி பெரும்பாடு பட்டு கட்டிய அணைக்கு, மகா எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை என்ற பொருளில், 'கிராண்ட் எத்தியோப்பியன் ரெனைசன்ஸ் டேம்' அல்லது 'ஜெர்டு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அணையின் முதல் கட்டம், 2020ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கட்டம் நிறைவேற்றப்பட்டது. திட்டம் முழுமை அடைந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட பயன்பாட்டுக்கான துவக்க விழா, செப்.,9ல் நடக்கிறது.

இந்த அணையானது, பாசனம், குடிநீர் திட்டம், மின் உற்பத்தி என பன்னோக்கு திட்டத்துடன் கட்டப்பட்டுள்ளது.இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, கென்யா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும், கடல் கடந்து அரேபிய நாடுகளுக்கும் வழங்க எத்தியோப்பியா திட்டமிட்டுள்ளது.

இந்த அணையால், தங்கள் நாட்டுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என்று புகார் கூறி வரும் எகிப்து, பிரச்னையை சமாளிக்க தயாராகி வருகிறது. திட்டம் தொடங்கிய காலத்தில் அணை கட்டினால் குண்டு வீசுவோம் என்று கூறிய அந்த நாடு, இப்போது நிலைமை கைமீறிப் போன நிலையில், 'பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்' என்று கூறி வருகிறது.

உலக நாடுகளுக்கு உத்தரவு போட்டும், வரி விதித்தும் அதிகாரம் செலுத்த நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த விவகாரத்திலும் தலையிட்டு எகிப்துக்கு ஆதரவாக பேசினார். ஆனால், அதை உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக கருதப்படும் எத்தியோப்பியா, புறக்கணித்து விட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us